இரண்டு தலை நான்கு கண்களுடன் அதிசய கன்றுகுட்டி

0
265

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டானில் இரண்டுதலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொது மக்கள் வியந்து பார்த்துச் சென்றனர்.

கங்கைகொண்டானை அடுத்த அணைத்தலையூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். பசு மாடுகள் வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது பசுமாடு ஒன்று நேற்று ஈன்ற கன்று இரு தலை மற்றும் நான்கு கண்களுடன் இருந்தது. அந்த கன்றுக்கு தேவையான உணவுகளை முருகன் குடும்பத்தினர் வழங்கினர். இத்தகவல் தெரிய வந்ததும், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கன்றுக்குட்டியை வியந்து பார்த்து சென்றனர். கங்கைகொண்டான் கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகள், அந்த கன்றுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்