கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

0
141

ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

உலக நாடுகளில் ஓமிக்ரான் அதிவேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனாவின் உருமாறிய வைரஸான ஓமிக்ரான் டெல்டாவை விட பன்மடங்கு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் நோயில் இருந்து மீண்டவர்களும் கூட ஓமிக்ரான்  வைரசால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு  கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்; வாழ்க்கையை இழப்பதை விட, நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது சிறந்தது.

தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை  விட, தற்போது ஒத்தி வைத்து விட்டு பிறகு கொண்டாடலாம் என டெட்ராஸ் அதானம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்