நவம்பர் முதல் ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம்

0
141

நவம்பர் மாதம் முதல் மூன்று ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத இருக்கை வசதி பெட்டிகள் அனுமதிக்கப்படவுள்ளன. சிறப்பு ரயில்களில் இருக்கை வசதி பெட்டிகளுக்கும் முன்பதிவு செய்வது அவசியமாக இருந்துவந்தது.

தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு நவம்பர் 1 முதல்,

  1. 1.வண்டி எண் 02628/02627 திருவனந்தபுரம் – திருச்சி – திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள்
  2. 2.வண்டி எண் 06850/06849 ராமேஸ்வரம் – திருச்சி – ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள் ஆகியவற்றிலுள்ள நான்கு இரண்டாம்வகுப்பு இருக்கைவசதியுள்ள பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் எடுத்து பயணம் செய்யும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  3. இதேபோல நவம்பர் 10 முதல்
  4. 1.வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல்நேரச்சிறப்பு ரயில்களிலுள்ள நான்கு இரண்டாம்வகுப்பு இருக்கை வசதிப்பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் எடுத்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்