தண்டவாளத்தில் கருங்கல்லை வைத்த இளைஞர் கைது.

0
280

கன்னியாகுமரி அருகே ரயில் தண்டவாளத்தில் கருங்கல்லை வைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் குருவாயூர் விரைவுவண்டி திக்கணங்கோடு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ரயிலில் பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த ரயில் ஓட்டுனர்,ரயிலில் எதோ மோதியதாக நினைத்து இதுதொடர்பாக அடுத்த ரயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர் அப்பகுதியை சோதனையிட்டனர்.

அப்போது பெரிய அளவிலான கருங்கல் ஒன்று இரண்டாக உடைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியின் அருகிலேயே ஒரு வீட்டில் வசித்து வரும் சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கருங்கல்லை தண்டவாளத்தில் வைத்தாரா,இல்லை வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்