பள்ளி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த இளைஞர் கைது

0
318

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியுடன் பழகி ஆபாச வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுடன் பகிர்ந்த இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகராஜன் என்ற இளைஞர் பள்ளி மாணவியுடன் வாட்ஸப்பில் பழகி அவருடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது அதை வீடியோ பதிவு செய்த அந்த இளைஞன் தனது நண்பர்களுக்கும் அதைப் பகிர்ந்துள்ளான்.இந்த நிகழ்வு மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர, அவர்கள் இதுகுறித்து திசையன்விளை பி-4 காவல் நிலையத்தில் இளைஞர் மீது புகார் அளித்துள்ளனர்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவனைப் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.அவனிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞன் மேலும் பல பெண்களுடன் வாட்ஸ்அப்பில் பழகி அவர்களுடைய ஆபாச வீடியோக்களைப் தனது செல்போனில் பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் “பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு செல்போன் வழங்குவது தவறில்லை, ஆனால் அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், இல்லையேல் இது போன்ற சிக்கல்களில் ஒன்றுமறியாத மாணவிகள் சிக்கிக் கொள்வார்கள் எனக் காவலர்கள் எச்சரித்து அந்த மாணவியின் பெற்றோரை அனுப்பி வைத்தனர்.கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்