முதலமைச்சரைத் தாக்கிய இளைஞர் – பீகாரில் பரபரப்பு

0
306

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமாரை இளைஞரொருவர் விழா மேடையில் தாக்கிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னா அருகே பக்தியார்பூர் எனும் இடத்திற்குச் சென்ற முதலமைச்சர் நிதிஷ்குமார், அங்குள்ள ஒரு தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டிருந்தார்.

அப்போது ஒரு இளைஞர் சர்வசாதாரணமாக பின்னால் நடந்து வந்து திடீரென முதலமைச்சர் நிதிஷ்குமாரின் முதுகில் கையால் தாக்கினார். உடனே சுதாரித்துக்கொண்ட முதலமைச்சரின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த இளைஞனின் பெயர் சர்க்கார் குமார வர்மா என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தன்னைத் தாக்கிய அந்த இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து அவர் நலம் பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் முதலமைச்சரின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என பல்வேறு தரப்பினரும் கேள்வியை எழுப்பி உள்ளனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்